| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 170508b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a கங்காதரமூர்த்தி (கங்காதரர்) |
| 300 | : | _ _ |a சைவம் |
| 340 | : | _ _ |a மணல் கல் |
| 500 | : | _ _ |a தன் புரிசடை ஒன்றில் கங்கையைத் தாங்கும் பெருமான் (கங்காதரர்) |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a தன் தேவி காண பூமிக்கு பாய்ந்து வரும் கங்கையை தன் புரி சடை ஒன்றில் தாங்கும் கங்காதரர் இடது காலை ஊன்றி, வலதுகாலை உயர்த்தி மேடையில் நிறுத்தி திரிபங்க நிலையில் நின்றுள்ளார். இது தூக்கிய முழங்கால் என்ற அமைப்பாகும். (ஊர்த்துவஜானு) நான்கு திருக்கைகளில் வலது முன்கை வலது பின் கடியவலம்பிதமாக தொடையில் வைத்தவாறும், இடது பின்கை விஸ்மய (விரல்களை விரித்து வியக்கும் முத்திரை) முத்திரையிலும் இடது முன்கை தன் சடை முடியிலிருந்து ஒற்றைப் புரியை நீட்டி அதில் கங்கைப் பெண்ணை தாங்கியவாறும் அமைந்துள்ளன. ஜடாபாரம் அணிந்துள்ள இறைவன் வலதுபுறம் சாய்த்துள்ளார். நீள்காதுகளில் அணிகலன்கள் அணிந்துள்ளார்.முப்புரிநூல் இடது தோளின் வழியே செல்கிறது. அரையாடை அணிந்துள்ள இறைவனின் இடதுகாலை தாங்கியாக கொண்டு தனது வலதுகையை அதன் மேல் வைத்து ஒயிலாக சாய்ந்த நிலையில் இக்காட்சியை பார்வையிடும் தேவி தன் இடது கையில் மலரைப் பிடித்துள்ளார். கங்காதரரின் இடது மேற்புறம் பாய்ந்து வரும் கங்கை பெண் வடிவில் காட்டப்பட்டுள்ளாள். வலது மேற்புறத்தில் நாய் ஒன்று காட்டப்பட்டுள்ளது. கங்கை தன் பெருக்கால் புரி சடையை விட்டு வெளியே பாய்ந்தோடி வருவதைத் தடுக்க நாய் காட்டப்பட்டுள்ளது. புனிதமான கங்கையை நாய் தொடுதல் ஆகாதன்றோ அதனால் இருக்கலாம் என்கிறார் மயிலை சீனி.வேங்கடசாமி. |
| 653 | : | _ _ |a கங்காதரர், கங்கையைத் தாங்கும் பெருமான், கங்காதர மூர்த்தி, இராஜசிம்மவர்மப்பல்லவன், காஞ்சிபுரம், தொண்டை மண்டலம், பல்லவர் சிற்பம், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் கலைகள், சிவ வடிவங்கள், சிவன் சிற்பங்கள், சிவன் சிலைகள் |
| 700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
| 752 | : | _ _ |a இறவாதீஸ்வரர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், கருவறை விமானம் தென்புற கோட்டம் |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம் |
| 905 | : | _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
| 914 | : | _ _ |a 12.84544398 |
| 915 | : | _ _ |a 79.7049965 |
| 995 | : | _ _ |a TVA_SCL_000003 |
| barcode | : | TVA_SCL_000003 |
| book category | : | கற்சிற்பங்கள் |
| Primary File | : |